Monday, March 11, 2013

மனதைத் தொட்ட வரிகள் !!!

 
பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி

 
துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். - கவியரசு கண்ணதாசன்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHANJsmvnbQ9seCfqwZwoN_-3o17uZDrJA1dS1gojuv9UXt0qrygIcW6tv0GgSXkddwJynN1tqtob8mBMXVaWUe_cF_GBmoETohxBESnUBFkaup2AMqGX2Hz2kQT2pg36R0Kab2nKmN7TS/s1600/ulaipu.jpg
உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்
 
அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்

பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா

அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.

பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி


No comments: